ADDED : ஆக 30, 2026 11:15 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் சவுராஷ்டிரா சபையைச் சேர்ந்த அமைப்பு சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதியர்களான 70 ஜோடிகளுக்கு பீமரத சாந்தி, விஜயரத சாந்தி சதாபிஷேக விழா நடந்தது.
நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோயிலில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள், யாகங்களுடன் பீமரத சாந்தி, விஜயரத சாந்தி பூஜைகள் நடந்தன. யாகசாலை முன்பாக அமர்ந்த மூத்த தம்பதியர் முறைப்படி சடங்குகளை நிறைவேற்றினர். தொடர்ந்து தம்பதியர் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டனர்.
சவுராஷ்டிரா அமைப்பு சார்பில் பட்டுச் சேலை, ஜரிகை வேட்டி, சட்டைத்துணி, சுவாமி படம், மங்கலப் பொருட்கள், அங்கவஸ்திரம், ஜமுக்காளம், குடை, டிராவல் பேக், பணம், தாம்பூலத்தட்டு, மஞ்சள் பை உள்ளிட்ட சீர்வரிசைப் பொருட்கள் சதாபிஷேக தம்பதிகளுக்கு வழங்கப்பட்டன.
விழாவில் பங்கேற்ற உறவினர்கள், பொதுமக்கள் மூத்த தம்பதியருக்கு ஆரத்தி எடுத்து, திலகமிட்டு வாழ்த்துகளை தெரிவித்து, அவர்களிடம் ஆசிர்வாதமும் பெற்றுச் சென்றனர்.
