தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கும்மி நடன நிகழ்ச்சி

கும்மி நடன நிகழ்ச்சி

கும்மி நடன நிகழ்ச்சி


ADDED : ஆக 30, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்: வேடசந்துார் கடைவீதி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கும்பி நடன நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது.

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் வேடசந்துார் கடைவீதியில் அமைந்துள்ளது. இங்கு வேடசந்துார், நாகம்பட்டி, கருக்காம்பட்டி, தம்மனம்பட்டி, நாகக்கோனானுார் உள்ளிட்ட 18 குக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து வழிபாடு நடத்துகின்றனர். தற்போது இக்கோயிலில் ரூ.50 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணிகள் நடக்கின்றன. இன்று காலை மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.‌ இதை முன்னிட்டு நேற்று மாலை பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் நிரம்பிய கலசங்கள், பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து எடுத்து வரப்பட்ட முளைப்பாரி, ஊர்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.‌ வேடசந்துார் அனைத்து வர்த்தக சங்கம் சார்பில், கோயில் முன்புறம் 6 அடி உயரமுள்ள அகர்பத்தி கொளுத்தப்பட்டு, பக்தியுடன் வழிபாடு நடந்தது. பின் ஜி.நடுப்பட்டி காளியம்மன் உருமி கும்மியாட்ட குழுவினரின், கும்மி நடன நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us