sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 72 ஆயிரம் ரேஷன் கார்டுகள்

/

 72 ஆயிரம் ரேஷன் கார்டுகள்

 72 ஆயிரம் ரேஷன் கார்டுகள்

 72 ஆயிரம் ரேஷன் கார்டுகள்


ADDED : பிப் 26, 2026 06:27 AM

Google News

ADDED : பிப் 26, 2026 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளிமந்தையம்: 'திண்டுக்கல் மாவட்டத்தில் 72 ஆயிரத்து 78 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக,'' அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம் தொகுதி தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் , சமுதாய கூடங்கள், தானியக்கிட்டங்கிகள், பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த அவர் சக்கரபாணி பேசியதாவது: பின்தங்கிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் இதுவரை 21 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 72 ஆயிரத்து 78 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 2.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 256 புதிய பகுதி நேர ,முழுநேர ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன என்றார்.

ஆர்.டி.ஒ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, மாவட்ட பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் கார்த்திகேயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாஹிரா, குமரன், ஒன்றிய செயலாளர் தங்கம் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us