/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மூன்று ஸ்டேஷன்களில் 8 வழக்குகள்
/
மூன்று ஸ்டேஷன்களில் 8 வழக்குகள்
ADDED : ஆக 06, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: உடுமலை குடிமங்கலம் சிறப்பு எஸ்.ஐ., சண்முகவேலை வெட்டி கொலை செய்த குற்றவாளிகளின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே நாயக்கனுாரை சேர்ந்தவர் மூர்த்தி 57.
இவரது மகன்கள் தங்கப்பாண்டி 32, மணிகண்டன் 30. வேடசந்துார் ,எரியோடு, வடமதுரை போலீஸ் ஸ்டேஷன்களில் அடிதடி, கொலை முயற்சி, திருட்டு என ஒவ்வொருவர் மீதும் தலா 4 வழக்குகள் உள்ளன. ஒரு அடிதடி வழக்கு மட்டும் முடிந்துள்ளது.
மற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. சம்பவத்திற்குப்பின் இவர்கள் இங்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வேடசந்துார் டி.எஸ்.பி., பவித்ரா தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.