ADDED : ஏப் 21, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: புருலியா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று அதிகாலை திண்டுக்கல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி தலைமையில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது ரயில் பெட்டியில் இரு பார்சல்களில் கிடந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். கடந்த இரு மாதங்களில் இதுவரை 30 கிலோவுக்கு மேல் ரயிலில் கடத்த முயன்ற கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.