sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தரமான உரங்கள் கிடைக்க ஆய்வுக்கு 850 உர மாதிரிகள்

/

தரமான உரங்கள் கிடைக்க ஆய்வுக்கு 850 உர மாதிரிகள்

தரமான உரங்கள் கிடைக்க ஆய்வுக்கு 850 உர மாதிரிகள்

தரமான உரங்கள் கிடைக்க ஆய்வுக்கு 850 உர மாதிரிகள்


ADDED : பிப் 09, 2024 05:19 AM

Google News

ADDED : பிப் 09, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ''ரசாயனம் மட்டுமல்லாது உயிர், இயற்கை என உரங்களின் தரத்தினை அறிய மாவட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 850 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது'' என வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.

வேளாண்மை தரக்கட்டுப்பாடு பணிகள்...


விவசாயிகளுக்கு உரம் சரியான நேரத்தில் நியாயமான விலையில் தங்கு தடையின்றி கிடைக்க வழி வகை செய்வதோடு, அதனை உறுதி செய்வதுதான் இத்துறையின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது. அதோடு உரம் தொடர்பான விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்துதல் உர விற்பனை சரியான முறையில் விற்பனை நடக்கிறதா தரமான உரங்கள் கிடைக்கிறதா போன்ற பணிகளை மேற்கொள்கிறோம்.

உரக்கடைகள் எண்ணிக்கை...


திண்டுக்கல் மாவட்டத்தில் 22 வகையான வேளாண் பயிர்கள் சுமார் 1.17 லட்சம் ஹெக்டேரிலும், 175 வகையான தோட்டக்கலைப் பயிர்கள் 1.09 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் பயிர்களுக்குத் தேவையான உரம் மாவட்டத்திலுள்ள 555 சில்லரை விற்பனை உரக் கடைகள், 70 மொத்த விற்பனையாளர்கள் என 625 உரக் கடைகள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

உரம் இருப்பு எவ்வளவு உள்ளது...


தேவையான இருப்பு தேவையான அளவிற்கு வைக்கப்பட்டுள்ளது. தட்டுபாட்டை தவிர்க்க தினமும் இருப்பு குறித்த விவரத்தை ஆய்வு செய்கிறோம். தற்போது வேளாண் சாகுபடிக்கு யூரியா 6637 மெ.டன் , டி.ஏ.பி. 2507 மெ.டன், காம்ப்ளக்ஸ் 9538 மெ.டன், பொட்டாஷ் 2521 மெ.டன்,சூப்பர் பாஸ்பேட் 682 மெ.டன் இருப்பு உள்ளது.

தரமற்ற உர விற்பனைகள் உள்ளதே...


தரமான உரங்கள் விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கலப்பு உரங்கள் உற்பத்தியாகுமிடங்கள் ,உர விற்பனை மையங்களில் இருந்து உர மாதிரிகள் எடுத்து உரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது.

ஆய்வு மூலம் தரமற்ற உரங்கள் விவசாயிகளை சென்றடைவது தடுக்கப்பட்டு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படுகிறது. ரசாயன உரங்கள் மட்டுமல்லாது, உயிர், இயற்கை, நுண்ணுட்டம் உட்பட அனைத்து உரங்களின் தரத்தை அறிய மாதிரிகள் எடுக்கப்படுகிறது. நடப்பாண்டில் மட்டும் 850 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

சரியான விலையில் உரம் விற்பனையாகிறதா...


சரியான விலையில் உரம் விற்பனை, விலைப்பட்டியல், மிஷின் பில் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இதற்காக விவசாயிகள், வியாபரிகள் என பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்கள் உள்ளன. அதில் சந்தேகங்கள், புகார்கள் தெரிவித்தால் கூட வட்டார அளவிலான அதிகாரிகள் உட்பட அனைவரும் பதிலளிப்பர். அதோடு விவசாயிகளுக்கு வட்டார அளவில் கூட்டம் நடத்துவது, மாதம் ஒரு முறை உரக்கடையினருக்கு கூட்டம் நடத்துவது போன்ற வழிகளை ஏற்படுத்துகிறோம்.

உரக்கடைகளில் ஆய்வு நடத்துகிறீர்களா ...


ஆய்வு செய்வதென்பது கணக்கில்லை. தேவையின் அடிப்படையில் திடீர் ஆய்வு, புகாரின் அடிப்படையில் குழுக்களாக செல்வது போன்ற பல்வேறு முறைகளில் ஆய்வு மேற்கொள்கிறோம். வட்டார, மாவட்டம் என அவ்வப்போது ஆய்வுப்பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறைபாடுகள் இருப்பின் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியது...


முக்கியமாக போதிய விழிப்புணர்வு தேவை. சரியான அளவிலான உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகமான ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மண் பரிசோதனை மேற்கொண்டு பரிந்துரைக்கப்பட்ட அளவிலான உரங்களை அந்தந்த பயிர்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டும்.

இதனால் செலவுகள் குறையும். ரசாயனம் மண்ணிற்கு செல்வது தடுக்கப்படும். அரசிற்கும் மானிய செலவு குறைகிறது. உரம் தொடர்பான புகார்களை உரம் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம். எப்போது வேண்டுமானாலும் விவசாயிகள் அதிகாரிகளை எளிதாக அணுகலாம்.

உர மானியம் விவசாயிகளை சென்றடைகிறதா...


உரத்திற்கு வழங்கும் மானியம் நேரடியாக விவசாயிகளை சென்றடைய உர விற்பனையாளர்கள் 'பி.ஓ.எஸ்.,' கருவியை பயன்படுத்தி உரம் விற்க வேண்டும். இதன் மூலம் எந்த கடையில் எந்தளவிற்கு இருப்பு இருக்கிறது என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு விதிமுறைகள் மீறப்பட்டாலோ, கூடுதல் விலைக்கு விற்றாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us