/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் அருகே ஐந்து தலைமுறை கண்ட பாட்டிக்கு பிறந்தநாள் விழா
/
நத்தம் அருகே ஐந்து தலைமுறை கண்ட பாட்டிக்கு பிறந்தநாள் விழா
நத்தம் அருகே ஐந்து தலைமுறை கண்ட பாட்டிக்கு பிறந்தநாள் விழா
நத்தம் அருகே ஐந்து தலைமுறை கண்ட பாட்டிக்கு பிறந்தநாள் விழா
ADDED : நவ 03, 2024 09:15 PM

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அம்மாபட்டியை சேர்ந்தவர் துரைச்சாமி.இவர் கடந்த 1999-ம் ஆண்டு இறந்து விட்டார். இவரது மனைவி பெயர் மூக்காயி (106). இவருக்கு 106-வது பிறந்தநாள் விழா கொண்டாட குடும்பத்தினர் பேசி முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலையில் அவரது வீட்டில் குடும்பத்தினர் முன்னிலையில் கேக் வெட்டி மூக்காயி பாட்டி தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
அதைத்தொடர்ந்து குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் தான் வெட்டிய கேக்கை வாயில் ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் பாட்டியிடம் ஏராளமானோர் ஆசி பெற்று திருநீறு பெற்றுச் சென்றனர். அவர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. பொதுவாக நூறாண்டு வாழவேண்டும் என்று திருமண விழா, பிறந்தநாள் விழா மற்றும் கோவில் விழாக்களில் நமது முன்னோர்கள் அன்று முதல் இன்றுவரை வாழ்த்துவது வழக்கமாக உள்ளது. அதன்படி இந்த மூக்காயி பாட்டி 106 வயதை கொண்டாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மேலும் மூக்காயி பாட்டிக்கு 7 பிள்ளைகள் உள்ளனர்.
இதில் 5 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். அத்துடன் 23 பேரன் பேத்திகளும்,25 கொள்ளுப்பேரன் பேத்திகளும், ஐந்தாவது தலைமுறை வாரிசாக 9 எள்ளுப்பேரன் பேத்திகளும் மொத்தம் 90குடும்ப உறுப்பினர்களை கொண்டுள்ளார். தமது 79 வயதில் கணவனை இழந்தாலும், இவரது உணவு பழக்க வழக்கங்கள் தினசரி கீரை வகைகளை சேர்ப்பதும், நாட்டு சுண்டக்காய், காய்கறிகள், நாட்டுகோழி வகைகள் இவரது உணவின் முக்கிய பங்காகும். நல்லகண்பார்வையுடன் அளவான உணவோடு சுடுதண்ணீரை பருகுவதாலும் நல்ல மனநல ஆரோக்கியத்துடன் மூக்காயி பாட்டி வசித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது