/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு ஆயுள்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு ஆயுள்
ADDED : அக் 16, 2024 02:17 AM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டை அருகே பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த மண் அள்ளும் இயந்திரம் டிரைவர் பிரவீன் 24. 2020ல் இடையகோட்டை பகுதிக்கு டிரைவர் வேலைக்காக வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு 2023ல் இறந்தார். இந்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது.
பிரவீனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞராக மைதிலி ஆஜரானார்.