ADDED : ஜன 22, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: குட்டத்தை சேர்ந்த விவசாயி சூரிய காந்தன் 46. இவர் அதே ஊரைச் சேர்ந்த அருண்குமாரிடம் 5 மாதங்களுக்கு முன் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கினார். ரூ.17 ஆயிரத்தை திருப்பி கொடுத்தநிலையில் மீதி உள்ள ரூ.8 ஆயிரத்தை கொடுக்கவில்லை.
அருண்குமார், சூரியகாந்தனை திட்டினார். இதனால் அருண்குமாரின் வீட்டுக்குச் சென்ற சூரியகாந்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அருண்குமாரின் தந்தை குப்புசாமி, சூரியகாந்தனை தாக்கினார். காயமடைந்த சூரியகாந்தன் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அருண்குமார்,குப்புசாமி மீது வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.