/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காதலனை காதலி தேடி சென்றதால் வீட்டை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
/
காதலனை காதலி தேடி சென்றதால் வீட்டை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
காதலனை காதலி தேடி சென்றதால் வீட்டை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
காதலனை காதலி தேடி சென்றதால் வீட்டை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
ADDED : அக் 12, 2024 05:05 AM
வேடசந்துார்: காதலனை காதலி தேடி சென்றதால் காதலன் வீட்டை தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்கு
பதிவு செய்துள்ளனர்.
வேடசந்துார் கொன்னாம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் .சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ளை காதலித்து வருகிறார் . 4 மாதங்களுக்கு முன்பு கார்த்திக்கை பார்க்க அவரது வீட்டுக்கு அப்பெண் சென்றுள்ளார். இதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் கார்த்திக் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டு பெண்ணை அழைத்து சென்றனர்.
இந்நிலையில் அப்பெண் கார்த்திக் பணி புரியும் இடமான சென்னைக்கு சென்று விட்டார். கோபமடைந்த பெண்ணின் தந்தை சுப்பிரமணி, தாய் ஆனந்தி உள்ளிட்ட உறவினர்கள் சிலர், கார்த்திக்கின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து டூவீலரை சேதப்படுத்தினர்.
சுப்பிரமணி, ஆனந்தி, காவியா, சந்தோஷ் குமார், வளர்மதி, அரவிந்த், அழகர்சாமி ஆகிய 7 பேர் மீது வேடசந்தூர் எஸ்.ஐ., அங்கமுத்து வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.