/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மளிகை கடை மரப்பெட்டி விழுந்ததில் குழந்தை பலி
/
மளிகை கடை மரப்பெட்டி விழுந்ததில் குழந்தை பலி
ADDED : நவ 12, 2024 12:28 AM
நிலக்கோட்டை : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே புதுப்பட்டியில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெயராமன் மனைவி தனலட்சுமி, 32. இவர்களுக்கு, மோனிஷாஸ்ரீ, 4, ஸ்ரீஹரி, 3, என்ற இரு குழந்தைகள். நேற்று முன்தினம் மாலை இரு குழந்தைகளும் கடையில் விளையாடி கொண்டிருந்தன.
அப்போது பொருட்கள் வைத்திருந்த மரப்பெட்டியை பிடித்து இழுத்ததில், அவர்கள் மீது மரப்பெட்டி விழுந்தது. குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட தனலட்சுமி, மரப்பெட்டியை துாக்கி அவர்களை மீட்டார்.
வத்தலகுண்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். மறுநாள் காலை, குழந்தை ஸ்ரீஹரி உடல்நலமின்றி இருக்க, நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

