sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

இயற்கையை ஊக்குவிக்கும் காபி விவசாயி

/

இயற்கையை ஊக்குவிக்கும் காபி விவசாயி

இயற்கையை ஊக்குவிக்கும் காபி விவசாயி

இயற்கையை ஊக்குவிக்கும் காபி விவசாயி


ADDED : பிப் 12, 2024 05:34 AM

Google News

ADDED : பிப் 12, 2024 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காபி விவசாயத்தில் இயந்திரத்தை பயன்படுத்தி இயற்கைக்கு ஊறு விளைவிக்காமல் பல்வகை பலன் தரும் மரங்களை வளர்க்கும் பட்டதாரி இளைஞரின் முயற்சியால் பறவைகள், தேனீக்கள் வரை இயற்கையின் அரவணைப்பில் உள்ளது.

தாண்டிக்குடி மலைப் பகுதியான பாச்சலுாரில் முன்னோர்கள் பராமரிப்பில் இருந்த காபி தோட்டத்தை நவீன யுக்திகள் கொண்டு இயற்கைக்கு பாதிப்பு விளைவிக்காமல் இயந்திர மயமாக்கல் மூலம் விவசாயம் செய்து வருபவர் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ரெஜிஸ் விக்னேஷ் பாண்டியன். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் விவசாயத்தில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் 2011ல் காபி விவசாயத்தில் புதுமையை புகுத்தினார்.

வழக்கமான நடைமுறையிலிருந்த காபி நடவான 6x6 என்ற அளவீட்டை மாற்றம் செய்து இயந்திரங்கள் சென்று வரும் வகையில் 12x3 என்ற அளவில் காபியை நடவு செய்து பின் இவற்றிற்கு களை எடுத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல் உள்ளிட்டவற்றிற்கு மினி டிராக்டர் மூலம் இயந்திரங்களை பயன்படுத்தினார்.

இதன் மூலம் இயற்கை சார்ந்தவற்றிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தொழில்நுட்பங்களை கையாண்டு களை வெட்டும் இயந்திரம் களைகளை வெட்டிய பின் மைதானம் போன்ற பசுமையாக காட்சியளிப்பது.

இதனால் நீர் பிடிப்பு தன்மையால் மண்ணில் ஈரப்பதம்,மண்ணில் உள்ள மண்புழு,நுண்ணுயிரிகள் பாதுகாக்கப்படுகிறது.

காபி மட்டுமல்லாது ஊடுபயிராக மிளகு, ஏலக்காய், வாழை உள்ளிட்ட விவசாயமும் இம்முறையில் செய்து அசத்துகிறார்.

2011 முதல் தோட்டத்தை தொழிட்ப ரீதியில் மாற்றி அமைத்தது மட்டுமல்லாது சில்வர் ஓக், ருத்ராட்சம், பலா, வேம்பு, ஆண்டு முழுவதும் பூத்துக் குலுங்கும் பூ மரங்கள் என 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மரங்களையும் நடவு செய்து அவற்றை 14 ஆண்டுகளாக பராமரிக்கிறார். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள அரிய பறவைகள், தேனீக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் இங்குள்ள மலை விவசாய பயிரில் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு விவசாயம் செழிக்க வழிவகை செய்கிறது.

இவர் பயன்படுத்தும் இயந்திரங்கள் அதிக ஒலி எழுப்பாமல் இயற்கைக்கு ஊறு விளைவிக்காமல் அமைதியாக தனது பணிகளை செவ்வனே செய்கிறது.

இதில் தனி சிறப்பு இயந்திரம் மூலம் மருந்து தெளிப்பது செடிகளில் உள்ள இலையில் மட்டுமே ஒட்டும் தன்மை மண்ணில் படாது சிறப்புற கையாண்டு உள்ளார்.

வியப் பாக பா ர்க் கின்றனர்


ரெஜிஸ்ட் விக்னேஷ் பாண்டியன்,விவசாயி,பட்டிவீரன்பட்டி: எம்.பி.ஏ.,படித்ததுக்கு பின் விவசாயத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. முன்னோர்கள் வழியில் விவசாயம் செய்யும் பட்சத்தில் ஆட்கள் பற்றாக்குறை நீடித்ததால் இதை சீர் செய்ய மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு இயந்திரங்களை பாச்சலுார் காபி தோட்டத்தில் இந்தியாவிலே முதன் முறையாக தனது தோட்டத்தில் பயன்படுத்தினேன். இதனால் ஆட்களை கொண்டு விவசாயம் செய்வதில் ஏற்படும் செலவினத்திலிருந்து 50 சதவிகிதம் செலவு குறைந்து கூடுதல் வருவாய் கிடைத்தது.

இயற்கைக்கு ஊறு விளைவிக்காத இந்த இயந்திரம் மூலம் விவசாயம் செய்வதால் தனது தோட்டத்தில் பறவைகள், தேனீக்கள் மற்றும் இதர பூச்சி இனங்கள் வந்து செல்லும் பல்லுயிர் மண்டலமாக உள்ளது.

இவ்விவசாய நடைமுறையை பல்வேறு பகுதியிலிருந்து வரும் விவசாயிகள் பார்த்து செல்கின்றனர். இந்த இயற்கைக்கு பாதிப்பில்லாத இயந்திரமாக்கல் விவசாயத்தில் இதுவரை 3 ஆயிரம் சோலை மரங்களும் பராமரித்து வருகிறேன் என்றார்.






      Dinamalar
      Follow us