sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மக்களை அச்சுறுத்தும் சேதமான டிரான்ஸ்பார்மர்

/

மக்களை அச்சுறுத்தும் சேதமான டிரான்ஸ்பார்மர்

மக்களை அச்சுறுத்தும் சேதமான டிரான்ஸ்பார்மர்

மக்களை அச்சுறுத்தும் சேதமான டிரான்ஸ்பார்மர்


ADDED : அக் 02, 2024 07:12 AM

Google News

ADDED : அக் 02, 2024 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொட்டியை அகற்றுங்க : திண்டுக்கல் லாரிப்பேட்டையில் மேல்நிலை தண்ணீர் தொட்டி சேதத்தால் பயன்பாடு இன்றி அப்படியே விடப்பட்டுள்ளது .இதனால் விபத்து அபாயம் உள்ளது. அருகில் குடியிருப்பு பகுதி இருப்பதால் தொட்டியை அகற்ற வேண்டும். --சின்னச்சாமி, திண்டுக்கல்.

கிடப்பில் பஸ் ஸ்டாண்ட் பணி : வேடசந்துார் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணிக்காக மூன்று மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டு தற்போது வரை எந்தவொரு பணிகளும் துவங்கவில்லை. கிடப்பில் போடப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணியை துவக்க வேண்டும்.

--அ.சந்திர சேகர், மாரம்பாடி .

சாக்கடையில் குப்பை : திண்டுக்கல் பாரதிபுரம் சாக்கடையில் குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கி செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது .கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி உள்ளது. சாக்கடையை சுத்தப்படுத்த வேண்டும்.

-முருகன், திண்டுக்கல்.

தேங்காய் மட்டையால் கொசு : திண்டுக்கல் - பழநி ரோட்டில் தேங்காய் மட்டைகளை குவித்துள்ளனர் .இதனால் மட்டையில் மழை நேரத்தில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது .போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்படுகிறது. மட்டைகளை அகற்ற வேண்டும்.

-சுவேதா,திண்டுக்கல்.பட்டுப்போன மரத்தால் விபத்து : திண்டுக்கல் ஒடுக்கம் ரோடு அரசு மருத்துவக் கல்லுாரி செல்லும் பாதையில் பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது.போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் மரம் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மரத்தை அகற்ற வேண்டும்.

-ராஜேஷ் குமார், திண்டுக்கல்.சேதமான டிரான்ஸ்பார்மர் : குஜிலியம்பாறை மல்லப்புரம் ரோட்டில் ரோட்டருகே உள்ள மின் டிரான்ஸ்பார்மர் மிக மோசமாக சேதம் அடைந்துள்ளது.இதனால் விபத்து அபாயம் உள்ளதால் மின் டிரான்ஸ்பார்மறை மாற்றி அமைக்க மின்வாரியம் முன் வர வேண்டும். --

-க.கந்தசாமி, குஜிலியம்பாறை.

ரோடு பள்ளத்தால் விபத்து : அய்யலுாரில் இருந்து புத்துார் செல்லும் வழியில் வைரப்பிள்ளைப்பட்டி அருகே ரோடு வளைவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் டூவீலர்கள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றன. இப்பகுதி ரோடு வளைவை அகலப்படுத்தி ரோடு மேம்பாட்டு பணிகளை செய்ய வேண்டும். --

-முரளி, அய்யலுார்.






      Dinamalar
      Follow us