/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க.,வினரே களமிறங்கி மடக்கி பிடித்த போலி பெர்மிட் மணல் லாரி
/
தி.மு.க.,வினரே களமிறங்கி மடக்கி பிடித்த போலி பெர்மிட் மணல் லாரி
தி.மு.க.,வினரே களமிறங்கி மடக்கி பிடித்த போலி பெர்மிட் மணல் லாரி
தி.மு.க.,வினரே களமிறங்கி மடக்கி பிடித்த போலி பெர்மிட் மணல் லாரி
ADDED : நவ 10, 2024 07:06 AM

எரியோடு : திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே போலி பெர்மிட் சீட்டுடன் மணல் லோடுடன் சென்ற லாரியை தி.மு.க.,வினர் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தி.மு.க.,வினர் வலியுறுத்தியும் வருவாய்த்துறையினர் புகார் அளிக்க தயக்கம் காட்டியதால் போலீசார் தவிப்பிற்குள்ளாகினர்.
வேடசந்துார் தி.மு.க., நிர்வாகி கார்த்திகேயனின் காலாவதியான பெர்மிட்டை முறைகேடாக திருத்தம் செய்து பேர்நாயக்கன்பட்டி அ.தி.மு.க., நிர்வாகி கவின் குவாரியில் இருந்து லாரிகளில் மணல் வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையறிந்த தி.மு.க.,வினர் கரூர்- திண்டுக்கல் ரோட்டில் புளியம்பட்டியில் லாரியை மடக்கி பிடித்து எரியோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
குஜிலியம்பாறை தாசில்தார் தமிழ்ச்செல்வி, வடுகம்பாடி வி.ஏ.ஓ., செந்தில்குமாருக்கு தகவல் தந்தும் போலீசில் புகார் தர தயங்கி தாமதம் செய்தனர். அதிருப்தியான தி.மு.க.,வினர், 'பிடித்த லாரி மீது நடவடிக்கை எடுக்க மறுத்தால் மக்களே திரண்டு முற்றுகை போராட்டம் நடத்துவர்' என எச்சரித்தனர்.
இதன் பின்னரே வருவாய்த்துறை சார்பில் புகார் தரப்பட்டு லாரி பறிமுதல் செய்யப்பட்டது. லாரி டிரைவர் குளித்தலை சேர்ந்த செந்தில்குமார் 36, மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எரியோடு போலீசில் வேடசந்துார் தி.மு.க., நிர்வாகி கார்த்திகேயன் தந்த மற்றொரு புகாரில், தன் காலாவதி பெர்மிட் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.