/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துாய்மைப் பணியாளர்களுக்கு விருந்து
/
துாய்மைப் பணியாளர்களுக்கு விருந்து
ADDED : அக் 25, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் துாய்மைப்பணியாளர்களை கவுரவிக்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன், செயல் அலுவலர் விஜயநாத், பேரூராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி சரவணன் முன்னிலை வகித்தனர். துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டு விருந்து அளிக்கப்பட்டது. நகர செயலாளர் ராஜ்மோகன்,வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, தலைமை எழுத்தர் பிரசாத், துப்புரவு ஆய்வாளர் செல்விசித்ராமேரி கலந்து கொண்டனர்.