/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை
/
முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை
ADDED : டிச 01, 2024 04:29 AM

நத்தம் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அண்ணா நகர் பகுதியில் சாலையோர முட்புதரில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
நத்தம்- அண்ணாநகர் செல்வவிநாயகர் கோயில் பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் உள்ள முட்புதரில் நேற்று அதிகாலை பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது.
அந்த வழியாக சென்றவர்கள் நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொப்புள் கொடி வெட்டப்படாத நிலையில் கதறி அழுது கொண்டிருந்த குழந்தையை இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி உள்ளிட்ட போலீசார் மீட்டனர்.
108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை வீசி சென்ற நபர் குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை கொண்டு நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.