/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழுதாகி நடுரோட்டில் நின்ற அரசு பஸ்
/
பழுதாகி நடுரோட்டில் நின்ற அரசு பஸ்
ADDED : ஜூலை 20, 2025 05:00 AM

நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்டிலிருந்து கோபால்பட்டி, வி.எஸ்.கோட்டை, கம்பிளியம்பட்டி வழியாக திருமலைக்கேணிக்கு அரசு டவுன் பஸ் நேற்று சென்றது.
தற்காலிக டிரைவர் ஒட்டி சென்றார். திருமலைக்கேணியில் இருந்து மீண்டும் நத்தம் செல்வதற்காக பஸ்சை டிரைவர் பின்னால் எடுக்க முயன்றார். அட்போது ரிவர்ஸ் கியரில் பழுது ஏற்பட்டு பின்னால் செல்ல முடியாமல் மலைப் பாதையில் நடுரோட்டில் நின்றது பயணிகள் பரிதவித்தனர். இதனால் திண்டுக்கல் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இது போல் நத்தம் பகுதி கிராமங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் ஒட்டை, உடைசலாகவும், பழுதடைந்த நிலையிலும் இயக்கப்படுகிறது. பழுதான பஸ்களை மாற்றி புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.