/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
/
நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
ADDED : நவ 01, 2025 03:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: நத்தத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு பஸ் சென்றது. 30-க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர்.கோபால்பட்டி பகுதியில் பஸ் வந்த போது பஸ் பழுதாகி சாலையோரத்தில் நின்றது.
இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த மற்றொரு பஸ்சில் பயணிகள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதையடுத்து பழுதான பஸ்சை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வந்து சரிசெய்து எடுத்து சென்றனர்.
அரசு பஸ்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

