/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆவேசம்
/
அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆவேசம்
அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆவேசம்
அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆவேசம்
ADDED : நவ 01, 2025 03:10 AM

திண்டுக்கல்: ''யார் போனாலும் அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது''என முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல்லில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த 54 வது ஆண்டு துவக்க விழாபொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இது வரை சும்மா இருந்துவிட்டு தற்போது உங்களுடன் ஸ்டாலின் என தொடங்கி அதைத் தருகிறேன் இதைத்தருகிறேன் என தி.மு.க., சொல்லி வருகிறது. மாதம் ரூ.ஆயிரத்தை கொடுத்துவிட்டு ரூ.5 ஆயிரம் வரை அனைத்தின் விலையையும் உயர்த்திவிட்டது.
தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைத்து கட்சியும் ஒன்றிணைவோம்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் ஒரு பணிகளும் நடக்கவில்லை.சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்.,செங்கோட்டையன் போன்றோர் வெளியே சென்றுவிட்டதால் கட்சி அழிந்து விட்டது என பேசுகின்றனர்.
அதெல்லாம் ஒன்றுமே இல்லை. யார் போனாலும் அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது என்றார். ராஜசேகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட அவைத் தலைவர் சங்கரநாராயணன், மாவட்ட துணை செயலாளர் பிரேம்குமார், இணைச் செயலாளர் திராவிட ராணி, வடக்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தனர்.