/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருவிழாவுக்கு வெளியூர் தி.மு.க., பிரமுகர் வந்ததால் வைக்கோல் படப்புக்கு தீவைப்பு
/
திருவிழாவுக்கு வெளியூர் தி.மு.க., பிரமுகர் வந்ததால் வைக்கோல் படப்புக்கு தீவைப்பு
திருவிழாவுக்கு வெளியூர் தி.மு.க., பிரமுகர் வந்ததால் வைக்கோல் படப்புக்கு தீவைப்பு
திருவிழாவுக்கு வெளியூர் தி.மு.க., பிரமுகர் வந்ததால் வைக்கோல் படப்புக்கு தீவைப்பு
ADDED : ஆக 03, 2025 02:23 AM
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் அய்யலுார் அருகே கோயில் திருவிழாவிற்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் வெளியூர் தி.மு.க., பிரமுகர் வந்ததால் தகராறு ஏற்பட்டது. தி.மு.க., நிர்வாகியின் வைக்கோல் படப்பு, மாட்டுக் கொட்டகை தீவைத்து எரிக்கப்பட்டது.
அய்யலுார் கருஞ்சின்னானுார் கோயில் திருவிழாவில் வெளியூர் அரசியல் பிரமுகர்களை அழைக்க வேண்டாம் என ஊர்மக்கள் முடிவு செய்திருந்தனர். திருவிழாவின் இறுதியாக நடந்த கலை நிகழ்ச்சியின் போது வேடசந்துார் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சாமிநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சிலர் இவர்களை வழிமறித்து, அரசியல் பிரமுகர்கள் வேண்டாம் என மக்கள் முடிவு செய்த நிலையில் எப்படி வரலாம். நீங்கள் வந்து சென்றதால் அ.தி.மு.க., பிரமுகர்கள் எங்கள் மீது வருத்தமடைவார்களே' கேள்வி எழுப்பி தகராறு செய்தனர்.
சாமிநாதன், 'ஊர் மக்கள் முடிவு குறித்து எனக்கு தெரியாததால் இங்கு வர நேரிட்டது'எனக்கூறி சென்றார்.
அடுத்த சிறிது நேரத்தில் உள்ளூர் தி.மு.க., நிர்வாகியான கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமான கொட்டகையில் கட்டியிருந்த ஆடு, மாடுகளை அவிழ்த்துவிட்டு கொட்டகை ,வைக்கோல் படப்பிற்கும் சிலர் தீவைத்தனர். வேடசந்துார் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணமூர்த்திக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட சாமிநாதன் சார்பில் 200 வைக்கோல் கட்டுகள் வழங்கப்பட்டன.