/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குடும்பக்கட்டுப்பாடுக்கு நிர்ப்பந்தம்
/
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குடும்பக்கட்டுப்பாடுக்கு நிர்ப்பந்தம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குடும்பக்கட்டுப்பாடுக்கு நிர்ப்பந்தம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குடும்பக்கட்டுப்பாடுக்கு நிர்ப்பந்தம்
UPDATED : ஆக 03, 2025 08:03 AM
ADDED : ஆக 03, 2025 02:21 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குடும்பக்கட்டுபாடு செய்ய டாக்டர்கள், செவிலியர்கள் கட்டாயப்படுத்துவதாக கணவரிடம் இளம்பெண் புகார் கூறும் வீடியோ கால்' வைரலாகி வருகிறது .
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே அய்யலுார், சுக்காவழியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரின் மனைவி ஜெயலட்சுமி.இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 3 வது முறையாக கர்ப்பம் தரித்த ஜெயலட்சுமி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜூலை 31 ல் ஆண் குழந்தை பிறந்தது. இதன்பின்பு இருவரும் தாய் சேய் நல வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.
இவரை குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும்படி டாக்டர்கள், செவிலியர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், சிகிச்சைக்கு மறுத்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் மருத்துவமனையில் இருந்து வெளியேறவிட மாட்டோம் என தெரிவிப்பதாக அலைபேசியில் வீடியோ கால் மூலமாக கணவர் பாண்டியராஜனிடம் ஜெயலட்சுமி புகார் தெரிவித்து அழுதுள்ளார்.
இந்த வீடியோ வாட்ஸ் ஆப்களில் வைரலாகிறது.
பாண்டியராஜன் கூறுகையில், ''சிகிச்சையில் இருக்கும் ஜெயலட்சுமிக்கு துணைக்கு கூட சரியான ஆள் இல்லை.
வலிதாங்கும் சக்தியும் அவருக்கு குறைவாக இருக்கிறது. 48 நாளுக்கு பின் இதே மருத்துவமனைக்கு வந்து குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்துகொள்வதாக எவ்வளவோ தெரிவித்தும் டாக்டர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்'' என்றார்.
மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி கூறுகையில், ''முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் குறிப்பிட்ட கால இடைவெளி இருக்கவேண்டும் என டாக்டர்கள் அறிவுரை கூறினர். இது வழக்கமான அறிவுரைதான் வழங்கினர். அவர்கள் விருப்பக்கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டனர்'' என்றார்.