/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உணவு பற்றாக்குறையால் விவசாய நிலங்களில் புகுந்த யானைக்கூட்டம்
/
உணவு பற்றாக்குறையால் விவசாய நிலங்களில் புகுந்த யானைக்கூட்டம்
உணவு பற்றாக்குறையால் விவசாய நிலங்களில் புகுந்த யானைக்கூட்டம்
உணவு பற்றாக்குறையால் விவசாய நிலங்களில் புகுந்த யானைக்கூட்டம்
ADDED : ஜன 10, 2025 07:33 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதிகளில் யானைகளுக்கு போதியளவு உணவு இல்லாததால் விவசாய நிலத்திற்குள் புகுந்து வாழை,தென்னை பயிர்களை சேதப்படுத்திய 7 யானைகளை கும்கி யானைகள் மூலம் வனத்துறையினர் சிறுவாட்டுக்காடு பகுதிக்குள் விரட்டினர்.
திண்டுக்கல் தர்மத்துப்பட்டி, கோம்பை,நீலமலைக்கோட்டை, ரெட்டி யார் சத்திரம்,சிறுவாட்டுக்காடு, பரப்பலாறு அணை உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள் வாழ்கின்றன. வன பகுதிகளில் யானைகள் விரும்பி சாப்பிடும் உணவுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருந்த 7 யானைகள் வனப்பகுதி அருகில் உள்ள தென்னை, வாழை, கரும்புகளை உண்டு அங்கேயே முகாமிட்டது. வனத்துறையினர் டாப்சிலீப்,முதுமலை பகுதியிலிருந்து 2 கும்கி யானைகளை அழைத்து வந்து 1 வாரமாக போராடி அங்கிருந்த 7 யானைகளையும் சிறுவாட்டுக்காடு பகுதிக்கு அனுப்பினர்.
அவைகள் தற்போது பரப்பலாறு அணை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த யானைகளை கண்காணிக்க 3 குழுக்களையும் வனத்துறை நியமித்துள்ளது. இவர்கள் யானைகளின் அசைவுகளை தினமும் கண்காணித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் பெரும்பாலும் வனப்பகுதிகளுக்குள் விதைப்பந்துகள் மூலம் கனிகள்,வன விலங்குகள் விரும்பி சாப்பிடும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடவு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இதுபோன்று நடுவதன் மூலம் விவசாய நிலத்திற்குள் வராமல் அங்கேயே உள்ள காய்,கனிகளை சாப்பிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யலாம். சமூக ஆர்வலர்கள்,தன்னார்வலர்கள் இணைந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

