/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அறுந்து விழுந்த உயர் மின் கம்பி; தடுத்த குறைமின் கம்பியால் விபத்து தவிர்ப்பு
/
அறுந்து விழுந்த உயர் மின் கம்பி; தடுத்த குறைமின் கம்பியால் விபத்து தவிர்ப்பு
அறுந்து விழுந்த உயர் மின் கம்பி; தடுத்த குறைமின் கம்பியால் விபத்து தவிர்ப்பு
அறுந்து விழுந்த உயர் மின் கம்பி; தடுத்த குறைமின் கம்பியால் விபத்து தவிர்ப்பு
ADDED : நவ 30, 2024 05:44 AM

செம்பட்டி; கசவனம்பட்டி அருகே குடியிருப்பு பகுதியில் உயர் மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது . ஆள் நடமாட்டம் இல்லாத சூழலில் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.
செம்பட்டி 230 வோல்ட் துணை மின் நிலையத்திலிருந்து வேடசந்துார் அருகே ரங்கநாதபுரம் துணை மின் நிலையத்திற்கு உயர் மின் அழுத்த பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அவசர காலங்கள் மட்டுமன்றி மின்தேவையை சமாளிக்கும் விதமாக இரு மின் நிலையங்களுக்கு இடையே பரிமாற்றத்திற்காக இப்பாதை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை பராமரிப்பதில் மின்வாரியத்தினர் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக புகார் நீடித்து வருகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக நேற்று கசவனம்பட்டி அருகே கோனுார் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டவர் மின் கம்பிகள் இணைப்பிற்கான கண்டக்டர் சாதனம் நேற்று மதியம் 12:00 மணிக்கு வெடித்து சிதறியது.
மின் கம்பியின் ஒரு முனை கணபதி என்பவரது வீட்டில் விழுந்தது. அடிப்பகுதி கசவனம்பட்டி -திண்டுக்கல் ரோட்டின் குறைமின் கம்பி பாதையில் விழுந்ததால் தரைப்பகுதியை வந்தடைவது தடுக்கப்பட்டது.
இப்பகுதியினர் மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததால் சீரமைப்பு பணி நடந்தது.
சம்பவ நேரத்தில் இப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சீரமைப்பிற்குப் பின் மாலை 5:15க்கு இப்பகுதியில் மின் வினியோகம் துவங்கியது.

