/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரத்து குறைவால் விலை உயர்ந்த எலுமிச்சை ஒரு பழம்; ரூ.10 ஐ நெருங்குகிறது

ADDED : பிப் 22, 2024 06:19 AM

திண்டுக்கல்,: வரத்து குறைவினால் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பழ மண்டியில் ஒரு எலுமிச்சை விலை ரூ.4 ஆக உயர்ந்துள்ளது.சில்லறை விற்பனையில் ஒரு பழம் ரூ.10 ஐ நெருங்குகிறது .
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான சிறுமலை, பண்ணைக்காடு ,தாண்டிக்குடி கிராமங்களில் எலுமிச்சை சாகுபடி நடக்கிறது. இவை திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சிறுமலை பழ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. இந்த சந்தைக்கு மணப்பாறை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் எலுமிச்சை பழங்கள் வருகிறது.
வெயில், பூச்சி தாக்குதலின் காரணமாக எலுமிச்சை விளைச்சல் குறைந்துள்ளது.
கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. இரு வாரம் முன்பு ஒரு பழம் ரூ. 2 க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ. 4 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை ரூ.80, 50 கிலோ கொண்ட மூடை தரத்திற்கு ஏற்ப ரூ. 4 முதல் 5 ஆயிரம் வரை ஏலம் விடப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு பழம் ரூ.6 முதல் ரூ.10 வரை விற்பனையாகிறது.
வரும் நாட்களில் தேவை அதிகமாகும் என்பதால், விலை குறைய வாய்ப்பில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.