/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வீட்டில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
/
வீட்டில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
ADDED : செப் 23, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: திண்டுக்கல்மாவட்டம் கொடைக்கானல் பள்ளங்கி ஒடகல்பாறையை சேர்ந்தவர் தனபால் 33. துவக்கத்தில் கஞ்சா விற்பனை செய்த இவரை போலீசார் கண்காணிக்கின்றனர்.
தற்போது கஞ்சா வைத்துள்ளாரா என சோதனை செய்தபோது வீட்டில் அனுமதி பெறாத ஒற்றை குழல் நாட்டு துப்பாக்கி, நான்கு தோட்டாக்களை வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து தனபாலை போலீசார் கைது செய்து நாட்டுத் துப்பாக்கி,தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
எதற்காக அவற்றை வைத்திருந்தார் என மேல்விசாரணை நடக்கிறது.