/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூட்டிய வீட்டில் திருட முயன்ற நபர் கையும் களவுமாக சிக்கினார்
/
பூட்டிய வீட்டில் திருட முயன்ற நபர் கையும் களவுமாக சிக்கினார்
பூட்டிய வீட்டில் திருட முயன்ற நபர் கையும் களவுமாக சிக்கினார்
பூட்டிய வீட்டில் திருட முயன்ற நபர் கையும் களவுமாக சிக்கினார்
ADDED : மார் 06, 2024 06:00 AM

சின்னாளபட்டி,: சின்னாளபட்டி காமாட்சி நகரில் பூட்டிய வீட்டில் திருட முயன்ற மர்ம நபரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் அம்பாத்துறை, சின்னாளபட்டி, செட்டியபட்டி பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வழிமறித்து, அலைபேசி , நகைகளை பறிக்கும் கும்பல் அவ்வப்போது கைவரிசை காட்டி வருகிறது.
சின்னாளபட்டி கருணாநிதி காலனி ரோட்டில் ஒரு வீட்டின் பூட்டை மர்ம நபர் உடைத்துக் கொண்டு இருந்தார். சந்தேகமடைந்த அப்பகுதியினர், கூச்சலிட்டு விரட்டினர். சற்று நேரத்தில் காமாட்சி நகர் பாலம் அருகே பூட்டி இருந்த வீட்டை கம்பி மூலம் பூட்டு உடைத்து உள்ளே சென்றபோது அந்தபகுதி பொதுமக்கள் பார்த்து கூச்சலிட்டுள்ளனர். அங்கு இருந்த வடிகாலில் குதித்து தப்ப முயன்ற போது அக்கம்பக்கத்தினர் சுற்றி வளைத்து 'கவனித்தனர்.
கருணாநிதி காலனி, பொன்னன் நகர், ஜனதா காலனியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
பிடிபட்டவரிடம் விசாரித்த போது, தோட்டனுாத்து பகுதியைச் சேர்ந்த ஆனந்த் 45, திருட வந்ததை ஒப்புக்கொண்டார். அங்கு வந்த சின்னாளபட்டி எஸ்.ஐ., டேவிட் தலைமையிலான போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

