/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிணற்றில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் உடல்
/
கிணற்றில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் உடல்
ADDED : செப் 26, 2024 05:24 AM
நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டி அருகே உள்ள கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு இறந்த நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பழநி நெய்க்காரப்பட்டி கே.வேலுார் பகுதியை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி மருதமுத்து 50. சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. இந்நிலையில் நெய்க்காரப்பட்டி அருகே உள்ள தனியார் கிணற்றில் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஆண் உடல் மிதந்தது. பழநி தாலுகா போலீசார் தீயணைப்பு துணையினர் உதவியுடன் உடலை மீட்டனர்.
கட்டட தொழிலாளி மருதமுத்து என்பது தெரியவந்தது. கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கிடந்ததால் கொலை செய்யப்பட்டு வீசியிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.