/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேறும் சகதியுமான நிலக்கோட்டை சந்தை
/
சேறும் சகதியுமான நிலக்கோட்டை சந்தை
ADDED : நவ 04, 2024 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை : நிலக்கோட்டையில் சனிக்கிழமை தோறும் வார சந்தை நடக்கிறது. அணைப்பட்டி ரோடு வழியாக சந்தைக்கு வரும் வழியில் தீபாவளியை முன்னிட்டு இறைச்சி கூடங்களிலிருந்து கொட்டப்பட்ட கோழி, மீன், ஆட்டுக் கழிவுகளால் சந்தை வளாகத்தில் சுகாதாரக்கேடு ஏற்பட்டது.
சந்தைக்கு வந்த மக்கள் முகம் சுளித்தனர். இறைச்சி கூடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் அப்பகுதியில் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சந்தை வளாகத்தில் உள்ள குப்பையை அகற்றி பேரூராட்சி நிர்வாகத்தினர் சந்தையை சீரமைக்க வேண்டும்.