/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பசுமையான பழநியை உருவாக்கும் நகராட்சி
/
பசுமையான பழநியை உருவாக்கும் நகராட்சி
ADDED : நவ 18, 2024 06:27 AM

பழநி நகரை சுகாதாரமாகவும் பசுமையாகவும் வைக்க நகராட்சி நிர்வாகம் பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகின்றன. அதில் சுற்றுச்சூழலை மேம்படுத்த நகராட்சி குப்பை கிடங்கில் வனத்துறையிடம் பெறப்பட்ட 500க்கு மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகளை நகரையொட்டிய ஊராட்சி பகுதிகளிலும் நட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நகரில் சேகரமாகும் குப்பையை இயற்கை உரங்களாக மாற்ற மக்குள் மக்காத குப்பையை பிரிக்கின்றனர். இதோடு தினமும் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் குப்பையை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுகாதாரத்தை மேம்படுத்த ஏற்பாடு
செந்தில்ராம்குமார், நகராட்சி சுகாதார அலுவலர் : 500க்கு மேற்பட்ட மரங்கள் குப்பை கிடங்கில் நடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் எதிர்காலத்தில் சுகாதாரம் மேம்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நகராட்சி பகுதியில் தடை பிளாஸ்டிக் விற்பனைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படுகிறது.
குப்பை முறையாக சேகரிக்கப்பட்டு நகரை துாய்மையாக வைக்க 149 துாய்மை பணியாளர்கள் 81 நகராட்சி ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
கிலோ ரூ.1க்கு இயற்கை உரம்
உமாமகேஸ்வரி, நகராட்சி தலைவர்: நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் 700 க்கு மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு கிலோ இயற்கை உரம் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. விவசாயிகளும் ஆர்வம் காட்டி இதனை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் திடக் கல்வி மேலாண்மை திட்டம் மேம்படுத்தப்பட்டு திறந்தவெளி கழிப்பிடமே இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
பழநியை துாய்மையாக வைப்பதுடன் பழநிக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக சுகாதாரமான சூழலை மேம்படுத்தவும் பாடுபடுகிறோம் என்றார்.