/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா சிலையை சுமந்து வந்த முஸ்லிம்

ADDED : டிச 13, 2025 05:54 AM

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியில் காவல் தெய்வங்களை வழிபடும் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இத்திருவிழாவினை பாரம்பரியம் மாறாமல் கொண்டாடினர். காலையில் தொடங்கி மாலையில் முடியும் ஒரு நாள் திருவிழாவில் அய்யனார், கன்னிமார், சடையாண்டி, வேட்டைக்காரன், கருப்புசுவாமி குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்களின் சுட்ட மண் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. ஊர்வலத்தில் கிராம வழக்கப்படி முஸ்லிம் சகோதரர் கால பைரவர் சிலையை சுமந்து வந்தார். 21 சிலைகளுடன் கிராமத்தின் பல்வேறு வீதிகள் வழியே வந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பள்ளிவாசல் பகுதியில் ஊர்வலம் வந்தபோது இஸ்லாமியர்கள் பழங்களை கொடுத்து வரவேற்றனர். முடிவில் சிலைகள் அனைத்தும் சோலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.