/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கல்வி பணியில் புது உதயம் ‛'அறம் சஹோதயா ' மாணவர்கள் கல்வி தரத்தை மேம்படுத்த முயற்சி
/
கல்வி பணியில் புது உதயம் ‛'அறம் சஹோதயா ' மாணவர்கள் கல்வி தரத்தை மேம்படுத்த முயற்சி
கல்வி பணியில் புது உதயம் ‛'அறம் சஹோதயா ' மாணவர்கள் கல்வி தரத்தை மேம்படுத்த முயற்சி
கல்வி பணியில் புது உதயம் ‛'அறம் சஹோதயா ' மாணவர்கள் கல்வி தரத்தை மேம்படுத்த முயற்சி
ADDED : டிச 06, 2025 09:39 AM

திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இணைந்து புதிதாக அறம் சஹோதயா கூட்டமைப்பு உருவாக்கி உள்ளன. கல்வியைத்தாண்டி மாணவர், ஆசிரியர் நலனுக்கும், வழிகாட்டுதலுக்கும், பயிற்சிக்குமான புது முயற்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கூட்டமைப்பு, மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கல்வியின் தரம் மேலும் உயருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை முன்னெடுக்க உறுதி கொண்டுள்ளது. திண்டுக்கல்லில் நடந்த இதன் துவக்க விழாவில் பங்கேற்றோர்களின் கருத்துக்கள்...
சிறப்பான தளம் இது பியூஸ்குமார் சர்மா, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் மண்டல இயக்குனர் : 'சஹ உதயா எனும் சொல்லிலிருந்து சஹோதயா வந்தது. இதற்கு ஒன்றாக எழுச்சி பெறுதல்' அர்த்தமாகும். கல்வியின் முன்னேற்றத்திற்காக சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இணைந்து, பாடத்திட்டம், மதிப்பீடு, ஆசிரியர் பயிற்சி, மாணவர் செழிப்பு, இணைப் பாடத்திட்டச் செயல்பாடுகளில் புதுமைகளை சேர்த்து செயல்படுவதற்கான சிறப்பான தளம் இது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் உயர்த்தும் முன்னோடி முயற்சியாக விளங்கும் .
உலகத்துக்கு ஏற்றபடி தயார் திவ்யா செந்தில்குமார், கூட்டமைப்புத் தலைவர்: ஆசிரியர்களின் வளர்ச்சி, பள்ளிகளுக்கிடையிலான கல்வி கூட்டுறவு, புதிய கல்வி முயற்சிகள், மாணவர்களின் முழுமையான வளர்ச்சி, மதிப்புகள், தொழில் சார்ந்த கல்வி, மாணவர்களின் செயல்பாட்டு பங்கு என ஆறு முக்கிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டுள்ளோம். மாணவர்களை இந்த உலகத்துக்கு ஏற்றபடி தயார் செய்யும் இயக்கமாக இது இருக்கும்.
போட்டி உணர்வோடு ... கயல்விழி, செயலாளர்: மாவட்டத்தில் உள்ள 57 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இணைந்து அறம் திண்டுக்கல் சஹோதயா கூட்டமைப்பு துவங்கியுள்ளது. அனைத்து பள்ளிகளும் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது, கல்வி மட்டுமல்லாது. விளையாட்டு, கலை, கல்வி அனைத்திலும் மேலோங்கிட உதவுவது, பொறாமை அல்லாமல் போட்டி உணர்வோடு அனைத்து பள்ளிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது ஆகியவை இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களாகும் .
தரமான கல்விக்கு உறுதி ஜான் பிரிட்டோ, மாவட்ட கல்வி அலுவலர்: சி.பி.எஸ்.இ., பள்ளிகள் ஒன்றிணைந்து சஹோதயா கூட்டமைப்பு ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சி. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் அனைத்து பள்ளியில் மாணவர்களுக்கும் தரமான கல்வியை உறுதி செய்ய முடியும். இந்த சஹோதயா கூட்டமைப்பு மூலமாக சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அதிக அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்த இயலும், நீண்ட பயணம் செய்யாமல் நமது பள்ளிக்கு வெகு அருகாமையிலே நடக்கும் போட்டிகளில் அதிக அளவு பங்கு பெற இயலும்.
முயற்சிகளை பகிர வழி சந்திரசேகர், ஆலோசகர்: சஹோதயா கூட்டமைப்பு இந்தியக் கல்வி முறையின் தரத்தை மேம்படுத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ஒரு முன்னெடுப்பு ஆகும். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் ஆசிரியர்களுக்கு அதிகத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கவும், பள்ளிகளில் புதிய கற்பித்தல் முயற்சிகளை பிற பள்ளிகளுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியில் பயன்படுத்தப்பட்ட அறம்'எனும் தொன்மையான வார்த்தையை புதிய சஹோதயா தன் பெயரில் இணைத்துள்ளது தனிச்சிறப்பாகும்.

