/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீசிடமிருந்து தப்ப முயன்றவருக்கு கால்முறிவு
/
போலீசிடமிருந்து தப்ப முயன்றவருக்கு கால்முறிவு
ADDED : அக் 07, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த கூலித்தொழிலாளி சல்மான்முகமது27. இவர் நேற்று முன்தினம் காந்திஜி புதுரோடு பகுதியில் நடந்து சென்றார்.
இவரிடம் திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த சாகுல்ஹமீது25,தாஜூதீன்21,இருவரும் கத்தியை காட்டி மிரட்டி ரூ.800 பறித்தனர். தெற்கு போலீசார் இருவரையும் பிடிக்க சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் இருவரும் தப்பி செல்ல முயன்றதில் சாகுல் ஹமீதுவிற்கு தவறி விழுந்து வலது கால் முறிந்தது. போலீசார் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு மாவுக்கட்டுபோட்டதும் போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

