ADDED : ஏப் 02, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : தெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் இருந்து வந்த லாரி வேடசந்துார் வழியாக சென்றது. நாமக்கல் மாவட்டம் செவ்வந்திபட்டியை சேர்ந்த பிரதீப் 34, ஓட்டி வந்தார். காக்காத்தோப்பூர் பிரிவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டோரம் உயர் மின் கோபுர விளக்கு கம்பத்தின் மீது மோதியது.
லாரியின் முன்பக்கம் நொறுங்கியது. மின் விளக்கு கம்பம் லாரியின் மீது விழுந்தது. வேடசந்துார் எஸ்.ஐ., அருண்நாராயணன் விசாரித்தார்.

