/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்டனைக்கு பயந்து நீதிமன்ற மாடியிலிருந்து குதித்த கைதி
/
தண்டனைக்கு பயந்து நீதிமன்ற மாடியிலிருந்து குதித்த கைதி
தண்டனைக்கு பயந்து நீதிமன்ற மாடியிலிருந்து குதித்த கைதி
தண்டனைக்கு பயந்து நீதிமன்ற மாடியிலிருந்து குதித்த கைதி
ADDED : மார் 20, 2024 12:11 AM

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தில் கைதான கூலித்தொழிலாளி ஷாஜகான் 37, தண்டனைக்கு பயந்து நீதிமன்ற மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். கை, இடுப்பு முறிந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திண்டுக்கல் குடைபாறைப்பட்டி ஏ.பி.நகரைச் சேர்ந்த ஷாஜகான் 2023ல் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். தாலுகா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இதன் விசாரணைக்காக ஷாஜகானை நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.
2 வது மாடியில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நடந்த விசாரணையில் ஷாஜகானுக்கு எதிராக சாட்சிகள் உறுதி செய்யப்பட்டது. வழக்கு முடிந்ததும் தண்டனை கிடைத்து விடும் என்ற அச்சத்தில் ஷாஜகான் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். தலை காயங்களுடன், கை, இடுப்பு உடைந்த நிலையிலிருந்த அவரை மீட்ட போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

