/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் வாழ்வாதாரத்தை காக்க ஊர்வலம்
/
பழநியில் வாழ்வாதாரத்தை காக்க ஊர்வலம்
ADDED : மார் 08, 2024 01:48 AM

பழநி; பழநி வாழ் மக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதல்படி பழநி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் பழநி கிரிவிதி செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பழநி வாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதாக கூறி பழநி வாழ் மக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் பழநியில் ஊர்வலம் நடைபெற்றது. பாத விநாயகர் கோயிலில் துவங்கி சன்னதி வீதி, பாளையம் ரோடு, மயில் ரவுண்டானா, வேல் ரவுண்டானா, புது தாராபுரம் ரோடு வழியாக ஆர்.டி.ஓ அலுவலகத்தை அடைந்தது. அங்கு ஆர்.டி.ஓ., சரவணன் இடம் மனு அளித்தனர்.
மனுவில், கிரிவலப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால் கிரிவலப் பாதையில் 15க்கும மேற்பட்ட கோயில்கள் ஜீவசமாதிகள் உள்ளன 2.7 கிலோமீட்டர் துாரம் கிரிவலப் பாதை அமைந்துள்ளது. இங்கு வாகனங்கள் செல்லக்கூடாது என்பதால் பட்டா நிலதாரர்கள் வெகுவாக பாதிப்படைவார்கள். நீதிமன்றம், மாவட்ட நிர்வாகம் பழநி வாழ் மக்கள் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதில் சித்தநாதன் சன்ஸ் செந்தில், கந்தவிலாஸ் செல்வகுமார், கண்பத் கிராண்ட் ஹரிஹர முத்தய்யர், முன்னாள் எம்.எல்.ஏ., வேணுகோபால், மார்க்சிஸ்ட் ராஜமாணிக்கம், தி.மு.க கவுன்சிலர்கள், பா.ஜ ., காங்.,த.மா.கா., உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

