sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

துார்வாராததால் புதர் மண்டிய பாறைகுளம்

/

துார்வாராததால் புதர் மண்டிய பாறைகுளம்

துார்வாராததால் புதர் மண்டிய பாறைகுளம்

துார்வாராததால் புதர் மண்டிய பாறைகுளம்


ADDED : மே 31, 2025 12:53 AM

Google News

ADDED : மே 31, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்தூர்: வேடசந்தூர் ஒட்டநாகம்பட்டி அருகே உள்ள சப்பாரை பாறை குளத்தை, முறையாக தூர்வாரி தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வேடசந்துார் ஒன்றியம் நாகம்பட்டி ஊராட்சி ஒட்டநாகம்பட்டி அருகே உள்ளது சப்பாரை பாறை குளம்.

35 ஏக்கர் கொண்ட இந்த குளத்திற்கு கருமலை மேற்கு பகுதியில் இருந்து வழிந்தோடும் மழை நீர் நவாளுத்து வழியாக வருகிறது.இந்த குளம் ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, ஒட்டநாகம்பட்டி புதுார் கிராமங்களுக்கு மத்தியில் உள்ளதால் நீர் நிறையும் போது சுற்றுப்பகுதியில் குடிநீர் பிரச்னை இருக்காது.

அருகில் உள்ள விவசாய போர்வெல்களிலும் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த குளம் நிறைய வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர். தற்போது இக்குளத்தின் மையப்பகுதியில் கருவேல முட்கள் நிறைந்து புதர் காடாக காட்சியளிக்கிறது.

இந்த முட்களை அகற்றி குளம் , வரத்து வாய்க்காலையும் முறையாக துார்வாரினால் போதிய தண்ணீர் தேங்கி இப்பகுதி விவசாயிகள் பயன் பெறுவர்.

காமராஜர் காலத்தில் துார்வாரியது


எம் .சுரேஷ்குமார், ம.தி.மு.க., மாணவர் அணி அமைப்பாளர், ஒட்டநாகம்பட்டி: தோட்டத்திற்கு அருகே தான் இந்த குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் தேங்கினால் சுற்று பகுதியில் குடிநீர் பிரச்னை இருக்காது. இந்த குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஊராட்சி , ஒன்றிய நிர்வாகம் சார்பில் துார் வார கூட முடியவில்லை.

காமராஜர் காலத்தில் இந்த குளம் முறையாக துார் வாரி புதுப்பிக்கப்பட்டது. அதன் பிறகு அப்படியே உள்ளது. தற்போது முட்புதர்கள் நிறைந்துள்ளதால் அவற்றை முறையாக துார் வரவேண்டும். குளத்தின் கீழ்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு ரோடு வசதி இல்லை.

இதை மாவட்ட நிர்வாகம் கவனித்து விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றார்.

புதர்காடாக காட்சி


பி.காளியப்பன், சமூக ஆர்வலர், வேடசந்துார்:இப்பகுதியில் உள்ள இந்த குளம் நிறைந்தால் சுற்றுப்பகுதி விவசாய கிணறுகள் , போர்வெல்களுக்கு போதிய நீர் ஆதாரம் கிடைக்கும். தற்போது புதர்காடாக காட்சியளிக்கும் இந்த குளத்தை பொதுப்பணித்துறை நிர்வாகம் முறையாக துார் வாரவேண்டும். அதேபோல் வரத்து வாய்க்காலையும் முறையாக துார்வாரி வரும் மழைக்காலத்திலாவது முறையாக தண்ணீரை தேக்க வேண்டும்.

கரைபோல் நீண்ட பாறை


எஸ்.கண்ணன், விவசாயி, ஒட்டநாகம்பட்டி:இந்த குளத்திற்கு அருகே தான் எங்களது தோட்டம் உள்ளது. இந்த குளம் நிறைந்தால் மூன்று போகமும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகசூல் எடுப்பர். சமீபகாலமாக குளத்தை தூர்வாராததால் புதர் மண்டி முட்புதராக காட்சியளிக்கிறது.

இந்த குளத்திற்கு மட்டுமே 300 அடி துாரத்திற்கு கரைபோல் நீண்ட பாறை உள்ளது .இதுவே இதன் சிறப்பம்சம்.பொதுப்பணித்துறை நிர்வாகம் மழைக்காலத்திற்குள் குளத்தை முறையாக தூர்வாரினால் இப்பகுதி பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார் என்றார்.






      Dinamalar
      Follow us