sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குடிமகன்களின் திறந்தவெளி பாராக மாறும் நிழற்குடை

/

குடிமகன்களின் திறந்தவெளி பாராக மாறும் நிழற்குடை

குடிமகன்களின் திறந்தவெளி பாராக மாறும் நிழற்குடை

குடிமகன்களின் திறந்தவெளி பாராக மாறும் நிழற்குடை


ADDED : நவ 20, 2024 05:09 AM

Google News

ADDED : நவ 20, 2024 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டுப்படுத்தலாமே : எரியோடு பஸ் ஸ்டாப் பகுதியல் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன. பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் பயணிகள், வாகனத்தில் செல்பவர்களும் அச்சப்படுகின்றனர். விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதால் இதனை கட்டுப்படுத்த வேண்டும்.

--கண்ணதாசன், எரியோடு.

நிழற் குடை மறைத்து பிளக்ஸ் : கொம்பேறிபட்டி பயணியர் நிழற்குடையை மறைத்து பிளக்ஸ் பேனர்கள் வைப்பதால் பஸ்கள் வருவதுதெரியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைப்பதை தடுக்க போலீசார் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். --

-பிரகாஷ், அய்யலுார்.

..........----------

சேதமான பெட்டியால் விபத்து : திண்டுக்கல் கோபால் நகரில் பி.எஸ்.என்.எல்., பெட்டி துருப்பிடித்து சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மோசமான நிலையில் இருப்பதால் அப்பகுதியில் கடந்து செல்வோர் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

-மாரிமுத்து, திண்டுக்கல்.

.............----------

கோழிக் கழிவுகளால் தொற்று : திண்டுக்கல் அருகே மாலபட்டி கேட்டில் கோழிக் கழிவுகளை கொட்டுவதால் துர் நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.ரோட்டோரத்தில் இப்படி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கீதா, திண்டுக்கல்.

............---------

லாரிகளால் சேதமான ரோடு : துச்சத்திரத்தில் இருந்து பொம்மநல்லுார் ரோட்டில் கல்குவாரி டிப்பர் லாரிகளால் ரோடு குண்டு குழியுமாக மாறியுள்ளது.இதனால் டூவீலர் ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதை தடுக்க வேண்டும். -கி.ரங்கசாமி, கம்பளி நாயக்கன்பட்டி.

..........----------

பாதியில் கட்டட பணி : கோவிலுார் உப்பளப்பட்டி பிரிவில் இரு ஆண்டுக்கு முன்பு ஹிந்து சமய அறநிலையத்துறையின் ஆய்வாளர் அலுவலகம் கட்டட பணி துவங்கி முழுமையாகாமல் புதர் மண்டி பாதியில் நிற்கிறது . இதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரசேகர், மாரம்பாடி.

..............----------

நிழற்குடையால் சுகாதாரக்கேடு :வத்தலக்குண்டு திண்டுக்கல் ரோட்டில் பயன்பாடற்ற நிழற்குடையை மது அருந்துவோர் பயன்படுத்தி அசுத்தம் செய்கின்றனர். அருகில் கடை வைத்திருப்போரும் ஆக்கிரமித்துள்ளனர். சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் நிழற்குடையை அகற்ற வேண்டும்.

-எஸ்.சேவியர், வத்தலக்குண்டு.

............---------






      Dinamalar
      Follow us