UPDATED : ஆக 12, 2026 10:10 PM
ADDED : ஆக 12, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
பழநி:பழநி லட்சுமிபுரம் இ.எஸ்.ஐ., ரோட்டின் ஓரத்தில் இருந்த வேப்பமரம் சாய்ந்து விழும் நிலையில் இருந்தது.
அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் திடீரென ரோட்டில் மரம் சாய்ந்தது. அவ்வழியாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அங்குள்ள கழிவுநீர் கால்வாய் சேதம் அடைந்தது. நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி நடவடிக்கையின் பேரில் மரம் உடனடியாக அகற்றப்பட்டது.
