ADDED : ஆக 12, 2026 08:34 PM
திண்டுக்கல், ஆக.13-
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லுாரி தமிழ்துறை, மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு மையம் சார்பில் கல்லுாரி கலையரங்கத்தில் ஆயுஷ் மருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சீனிவாசகன் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் பாண்டீஸ்வரி வரவேற்றார்.
மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை திட்ட அலுவலர் ஜெயச்சந்திரன், இளநிலை ஆராய்ச்சியாளர் பாலமுருகன் ஆயுஷ் மருந்துகளுக்கு பாதுகாப்பு துறையின் முக்கியத்துவம், போலி மருந்துகள், விளம்பரங்கள், வைத்தியர்களை கண்டறிதல், மருந்துகளினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.
இயற்கை மருத்துவம், ஆரோக்கியமான உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் குறித்து டாக்டர் தேவராஜ் பேசினார். இதில் மாணவர்கள், பேராசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
