/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரசிகர் மன்றத்தினரின் வித்தியாச முயற்சி
/
ரசிகர் மன்றத்தினரின் வித்தியாச முயற்சி
ADDED : ஜூலை 14, 2025 12:32 AM
திண்டுக்கல்: நடிகர் சூர்யாவின் 50வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளதையொட்டி, 50 நாள், 50 நற்பணிகள் எனும் தலைப்பில் ரசிகர் மன்றத்தினர் வித்தியாசமான கொண்டாட்ட முயற்சியினை கையிலெடுத்துள்ளனர்.
ஜூலை 23ல், நடிகர் சூர்யாவின் 50வது பிறந்தநாள் முன்னிட்டு, பொன்விழா பிறந்த நாளாக கடைபிடிக்க திண்டுக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றத்தினர் முடிவுசெய்தனர்.
அதன்படி, 50 நாட்கள் 50 நற்பணிகள் எனும் தலைப்பில் ஜூன் 18 முதல் அன்னதானம், நலத்திட்டம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நற்பணிகள் செய்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று ரத்தத்தான முகாம் நடந்தது.