/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கீழகோயில்பட்டியில் பூ எருவாட்டி பாரம்பரியத்தை தொடரும் கிராமம்
/
கீழகோயில்பட்டியில் பூ எருவாட்டி பாரம்பரியத்தை தொடரும் கிராமம்
கீழகோயில்பட்டியில் பூ எருவாட்டி பாரம்பரியத்தை தொடரும் கிராமம்
கீழகோயில்பட்டியில் பூ எருவாட்டி பாரம்பரியத்தை தொடரும் கிராமம்
ADDED : ஜன 18, 2025 07:28 AM

வத்தலக்குண்டு : சங்க இலக்கியத்தில் காணப்படும் பூ எருவாட்டி திருவிழாவை பழமை மாறாது கீழகோயில்பட்டி கிராமத்தினர் இன்றும் கடைபிடித்து வருகின்றனர்.
கீழகோயில் பட்டியில் மார்கழியில் வாசலில் வைக்கப்படும் பூசணி பூ , சாணியை எருவாட்டியாக தட்டி வைத்து சேமித்த பெண்கள் அதனை காவல் தெய்வங்கள் முன்பாக வைத்து கும்மியடித்து பாட்டு பாடி கிராமத்திற்கு அருகே உள்ள மருதா நதியில் சூடமேற்றி விட்டனர்.
இவ்வூரை சேர்ந்த 80 வயது பெரியவர் செல்லம் கூறுகையில், ''எனது முப்பாட்டனார் காலத்தில் இருந்து இது கடை பிடிக்கப்பட்டு வருகிறது. பூ எருவாட்டி சேமித்து வைத்திருக்கும் பெண்கள் வீட்டிற்கு மேளதாளத்துடன் சென்று அவர்களை கோயிலுக்கு அழைத்து வந்து கும்மி அடித்து, பூ எருவாட்டியை ஆற்றில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்'' என்றார்.