/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் ரோட்டில் வலம் வந்த காட்டுமாடு
/
'கொடை' யில் ரோட்டில் வலம் வந்த காட்டுமாடு
ADDED : ஜூலை 24, 2025 04:45 AM

கொடைக்கானல் : கொடைக்கானலில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் காட்டுமாடு ரோட்டில் நடமாடியது. சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். சமீபமாக வனப்பகுதியில் மேய்ச்சல் உணவுகள் இல்லாத நிலையில் நகரப் பகுதியில் உள்ள பசுமை புல்வெளி, தண்ணீரை தேடி காட்டு மாடுகள் நகரத்திற்குள் வரும் நிலை அதிகரித்துள்ளது. இவ்வாறான சூழலில் வனவிலங்கு, மனித மோதல் ஏற்பட்டு உயிர்பலி, காயம் உள்ளிட்ட அசாதாரண நிலை ஏற்படுகிறது. பெயரளவிற்கு வனத்துறை கண்காணிப்பு குழுக்களை நியமித்த போதும் பலனில்லை.
மாறாக காட்டு மாடுகள் போக்கு காட்டி நகரை விடுத்து செல்ல மறுக்கிறது.
நேற்று மாலை மூஞ்சிக்கல் மெயின் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையே காட்டுமாடு சாவகாசமாக ரோட்டில் சென்று வாகன ஒட்டிகளை அச்சுறுத்தியது.
இந்த ரோட்டில் மாவட்ட வனத்துறை அலுவலகம், அரசு மருத்துவமனை, சுற்றுலா அலுவலகம், தங்கும் விடுதி, வணிக நிறுவனங்கள் இருப்பது குறிப்பிடதக்கது.
இவ்வாறான அசாதாரண நிலை விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதன் மீது வனத்துறையினர் விழிப்பு காட்ட வேண்டும் ''என்றனர்.