நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு : கோயம்புத்துார் அருகே ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் 60. இவரது மனைவி புஷ்பலதா 55,உறவினர்கள் சித்துராஜ் 55, ராஜேஸ்வரி 47, ஆகியோருடன் காரில் பழநிக்கு வந்தார்.
சுவாமி தரிசனம் பின் ராமேஸ்வரம் புறப்பட்டனர். கொடைரோடு ஊத்துப்பட்டி பகுதியில் வந்த போது காரின் டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
ராஜேஸ்வரி இறந்தார். மற்றவர்கள் காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

