/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒன்றிய அலுவலகங்கள் தோறும் ஆதார் மையங்கள் திறக்கலாமே! மக்கள் அலைக்கழிப்பை தடுக்க கவனம் செலுத்துங்க

ADDED : நவ 30, 2024 05:43 AM

ஆதார் கார்டுகள் மக்களின் எல்லா தேவைகள், அடையாளங்களுக்காக பயன்படுத்தக்கூடிய ஒரு அங்கீகாரமாக உள்ளது.
இதில் திருத்தம் செய்வதற்காக அரசு தரப்பில் இ சேவை மையங்கள்,போஸ்ட் ஆபிஸ்களில் வசதிகள் உள்ளன .
மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் முதல் கட்டமாக ஆதார் நிரந்தர பதிவு தொடங்கப்பட்டது.
இங்கு மட்டும் இருப்பதால் ஏராளமான மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் பலரும் அவதிப்படும் நிலை உருவாக தனியார் சென்டர்களுக்கு செல்கின்றனர். இங்கு கூடுதலாக பணம் வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் தொடர்ந்து பாதிக்கின்றனர். இதைத்தடுக்கும் விதமாக திண்டுக்கல் ஒன்றிய அலுவலகத்தில் ஆதார் நிரந்தர பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு புதிய ஆதார் பதிவு,5-15 வயதுக்கான கட்டாய கருவிழி,கைரேகை பதிவு,ஆதார் நிலை அறிதல் இலவசமாக செய்யப்படுகிறது.
பெயர், பிறந்த தேதி, இனம்,முகவரி,தொலைபேசி, மின்னஞ்சல் மாற்றத்திற்கு ரூ.50,புகைப்படம், கருவிழி,கை ரேகை புதுப்பித்தல் ரூ.100,ஆவணங்களை புதுப்பித்தல்,ரூ.50,ஆதாரில் அச்சிடல் கருப்பு வெள்ளை ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற ஒன்றிய அலுவலகங்களிலும் ஆதார் நிரந்தர பதிவு மையங்களை திறந்தால் கிராம மக்கள் அலைக்கழிக்கப்படுவதை தடுக்கலாம். இதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.