நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: கரியன் குளக்கரை தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விசேஷ பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு கூழ் வழங்கல் நடந்தது.
சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.கன்னிவாடி, தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு மஞ்சள் நீர், பால் அபிஷேகம் நடந்தது. வாலை திரிபுரை சக்திக்கு விசேஷ மலர் அலங்காரம், சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது.