/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் முனீஸ்வரர் கோயிலில் ஆடிபெருக்கு விழா
/
திண்டுக்கல் முனீஸ்வரர் கோயிலில் ஆடிபெருக்கு விழா
ADDED : ஆக 03, 2025 04:04 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனி , முனீஸ்வர், ராஜ விநாயகர் கோயில் ஆடிப்பெருக்கு விழாவில் பக்தர்கள் அக்னிசட்டி ,அலகு குத்தி பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனி , முனீஸ்வர், ராஜ விநாயகர் கோயில் ஆடிப்பெருக்கு உற்ஸவ திரு விழா ஆக.1ல் கால் நடுதலுடன் தொடங்கியது. இன்று முடிய 3 நாட்கள் நடக்கும் விழாவில் முதல் நாளில் சிறப்பு வழிபாடு,தீபாராதனையுடன் மஞ்சள் நீராட்டு நடைப்பெற்றது . 2ம் நாள் வேல் அழைப்புடன் பக்தர்களால் அக்னிசட்டி எடுத்து வரப்பட்டது. இதை தொடர்ந்து அலகு குத்தப்பட்டது. அதன் பின் மாடு,மயில் ,கரகாட்டம் ,தப்பாட்டத்துடன் பால் குடங்களுடன் ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாநாட்களில் அன்னதானமும் நடந்தது. மூன்றாம் நாளான இன்று சிறப்பு அபிேஷகம்,தீபாராதனை என சிறப்பு வழிபாடுகளும் நடக்கின்றன. ஏற்பாடுகளை விழா குழு தலைவர் ஜெகநாதன், செயலாளர் குண சேகரன், பொருளாளர் பால்பாண்டி செய்கின்றனர்.