/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர வழிபாடு
/
திண்டுக்கல் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர வழிபாடு
ADDED : ஜூலை 29, 2025 01:00 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அம்மன் கோயில்களில் நடந்த ஆடிப்பூர விழாவில் வளையல் அலங்காரம், அபிேஷகம், கர்ப்பிணி களுக்கு வளைகாப்பு என சிறப்பு வழிபாடுகள் நடந்தன.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வளையல்களை காணிக்கையாக வழங்கி வழிப்பட்டனர்.
திண்டுக்கல் எம்.வி. எம். நகர் தென்திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் கலச பூஜை, திருமஞ்சனம் நடைப்பெற்றது. மாலையில் ஆண்டாள் திருக் கல்யாணம் நடந்தது.இதையொட்டி மாப்பிள்ளை அழைப்பும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், ஜான் பிள்ளை சந்து வராகி அம்மன் கோயில், கூட்டுறவு நகர் கணபதி கோயிலில் வராகி அம்மன் சன்னதி, பழநி ரோடு பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
பழநி: பெரியநாயகி அம்மன் கோயிலில் 16 வகையான சிறப்பு அபிஷேகம், வளையல்களால் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு முளைப்பாரி வைத்து வழிபட்டனர். பால சமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புது தாராபுரம் ரோடு சாலை ரெணகாளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடை பெற்றது.
கொடைக்கானல்: கொடைக்கானல், தாண்டிக் குடி மலைப்பகுதி அம்மன் கோயில்களில் ஆடிப் பூரம் வளைகாப்பு விழா நடந்தது. ஆனந்தகிரி மாரியம்மன் கோயிலில் சுவாமிக்கு அபி ஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து சுவாமிக்கு வளையல்களால் அலங் காரம் செய்யப்பட்டது. தாண்டிக்குடி பட்டத்து விநாயகர் கோயிலில் உள்ள துர்க்கையம்மன், பிரித்யங்கா தேவிக்கு வளையல்களால் அலங் கரிக்கப்பட்டு வளைகாப்பு நடந்தது. அன்னதானம் நடந்தது.
நத்தம்: மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளையல்களால் அலங் காரம் செய்ய சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்செய்தனர்.
அவர்களுக்கு வளையல்கள், அன்னக்கூழ் பிரசாதமாக வழங்க பட்டது. கம்பிளியம் பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயில், கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் செண்பகவல்லி அம்மன், மீனாட்சிபுரம், காளியம்மன், அசோக்நகர் பகவதி அம்மன், காம ராஜர்நகர் பத்திர காளியம்மன், தில்லை காளியம்மன், ராஜகாளியம்மன், குட்டூர் உண்ணாமலை அம்பாள் கோயில்களிலும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் களுக்கு வளையல் காப்பு அலங்காரங்கள் செய்ய சிறப்பு அபி ஷேகம் நடந்தது.
சின்னாளபட்டி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா நடந்தது. அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், மலர், வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பல்வேறு வகையான சித்ரான்னங்கள் படையல் இடப்பட்டன. மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப் பட்டது.
அன்னதானத்துடன் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு கண்ணாடி வளையல்கள் வழங்கப்பட்டன.தெத்துப்பட்டி ராஜகாளி யம்மன் கோயிலில் ஆடிப்பூர சிறப்பு பூஜை நடந்தது.
அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம், சக்தி அம் மனுக்கு மலர் அலங் காரத்துடன் மகா தீபா ராதனை நடந்தது.
கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் கமலவல்லி, ஆண்டாளுக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது.-