UPDATED : ஆக 31, 2026 06:58 PM
ADDED : ஆக 31, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
பாலசமுத்திரம்:பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்ஸவ விழாவில் தேரோட்டம் நடந்தது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஆக.,23ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஆக.,29ல் ஸ்ரீதேவி, பூதேவி அகோபில வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம், ஆக.,30ல் பார்வேட்டை நடந்தது.
நேற்று காலை சுவாமி தேரேற்றம் நடந்து 7:15 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அதன்பின் தேர்க்கால் பார்த்தல் நடந்தது. சுவாமி தீர்த்தவாரி நடந்தது.
தேரோட்டத்தில் கோயில் இணை கமிஷனர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று (செப்.,1) கொடி இறக்கமும், நாளை (செப்.2.,) விடையாற்றி உற்ஸவத்திற்கு பிறகு பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
