தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்


UPDATED : ஆக 31, 2026 06:54 PM

ADDED : ஆக 31, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 06:54 PM ADDED : ஆக 31, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்:வேடசந்துார் கடைவீதி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் சுற்றியுள்ள கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் ரூ.50 லட்சம் மதிப்பில் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடந்த நிலையில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

இதற்காக பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்கள் யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வானத்தில் 6 கருடன்கள் வட்டமிட்டது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us