/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆனித் திருமஞ்சனம் நடராஜருக்கு அபிஷேகம்
/
ஆனித் திருமஞ்சனம் நடராஜருக்கு அபிஷேகம்
ADDED : ஜூலை 03, 2025 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:பழநியில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு பால்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின் தீபாராதனை நடந்தது. திருமஞ்சன நிகழ்ச்சிக்கு பிறகு நடராஜர், சிவகாமி அம்மன் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாலசமுத்திரம்,பாலாறு பொருந்தலாறு அணை, அமுதீஸ்வரர் கோயிலில் ஆனித் திருமஞ்சன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.